"நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது" - உச்ச நீதிமன...
புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது.

அதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக்கினால் அதற்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் சாப்பாட்டை வீணாக்கக்கூடாது என்பதற்காக இது போன்ற ஒரு திட்டத்தை அறிவித்து இருப்பதாக உணவகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதிவு ட்விட்டர் பக்கத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் பலரும் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
புனே சதாசிவ் பேட் பகுதியில் செயல்படும் துர்வாங்குர் உணவகத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகமான நெட்டிசன்கள் உணவகத்தின் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். இது போன்ற திட்டத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் சாப்பாட்டைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைப்பது நியாயமில்லை என்றும், சாப்பாடு சுவையாக இல்லாவிட்டால் எப்படிச் சாப்பிட முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
வேறு சில நெட்டிசன்கள் இத்திட்டம் மிகவும் அருமையானது என்று புகழ்ந்துள்ளனர். ஒரு சில படங்களில் இது போன்று உணவகத்தில் உணவை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறுவதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறையில் இப்போதுதான் அதனைக் காண முடிவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.