ராஜஸ்தான்: கணவனைக் கொன்று டிரமில் உப்பு போட்டு அடைத்து தப்பி ஓடிய பெண்; காதலனுடன...
சௌதி சூப்பர் கோப்பை: ரொனால்டோ உதவியால் அல்-நாஸர் இறுதிக்கு முன்னேற்றம்!
அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியின் 10-ஆவது நிமிஷத்தில் அல்-நாஸர் அணியின் சடியோ மானே கோல் அடித்து அசத்தினார். அதற்கு பதிலடியாக அல்-இத்திஹாத் கிளப் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.
1-1 என சம்நிலையில் இருக்க, 25-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து சடியோ மானே வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் விளையாடியது அல்-நாஸர்.
முதல் பாதியில் இரு அணியும் 1-1 சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் அல்-நாஸர் அணி ஆதிக்கம் செலுத்தியது.
இந்தப் போட்டியின் 61-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த அசிஸ்ட்டால் அந்த அணியின் ஜாவோ பெலிக்ஸ் கோல் அடித்தார்.
90+5-ஆவது நிமிஷம் வரை போராடியும் அல்-இத்திஹாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், அல்-நாஸர் அணி 2-1 என வெற்றி பெற்றது.
சௌதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அல்-நாஸர் அணியுடன் வரும் சனிகிழமை (ஆக.23) அல்-கத்சியா எஃப்சி அல்லது அல்-அஹ்லி சவுதி அணி மோதவிருக்கிறது.
Cristiano Ronaldo could've scored this, but chose to assist Joao Felix on his debut for Al Nassr, and there are people who call him selfish
— Preeti (@MadridPreeti) August 19, 2025
pic.twitter.com/o70m2JKGQA