Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் ...
சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!
நடிகை ரெஜினா கேசண்ட்ரா சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா கேசண்ட்ரா தமிழில் 2005-ல் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு சூர்யகாந்தி என்கிற தெலுங்கு படம் மூலம் நாயகியானார்.
பின், சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நாயகர்களாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் தமிழில் நாயகியானார். இப்படத்தில், இவரின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருந்தது.
இவர் நடித்த ராஜதந்திரம், மாநகரம் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். இறுதியாக, விடாமுயற்சியிலும் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது, மூக்குத்தி அம்மன் - 2, செக்சன் 108 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரெஜினா கேசண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனால், ரசிகர்கள் ரெஜினாவின் சிறந்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சூர்யா படத்திற்கு இசையமைக்கும் சுஷின் ஷியாம்!