2025 மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-க்கான இந்திய மகளிரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்.30 முதல் நவ.2ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த உலகக் கோப்பை போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளாக நடைபெறவிருக்கின்றன.
இந்தப் போட்டியின் தொடக்கம் இந்தியாவும் இலங்கையும் பெங்களூரிவில் மோதுகின்றன.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர வீராங்கனை ஷெஃபாலி வர்மா இல்லாதது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைக்கான இந்திய மகளிரணி
1. ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்)
2. ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்)
3.பிரதீகா ராவல்
4.ஹர்லின் தியோல்
5.தீப்தி சர்மா
6. ஜெமிமா ரோட்ரிகஸ்
7. ரேணுகா சிங் தாக்குர்
8. அருந்ததி ரெட்டி
9. ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்)
10. கிராந்தி காட்
11. அமன்ஜோத் கௌர்
12. ராதா யாதவ்
13. ஸ்ரீ சரணி
14. யஷ்டிகா பாட்டியா (வி.கீ)
15. ஸ்நேக ரணா
A power packed #TeamIndia squad for the ICC Women's Cricket World Cup 2025
— BCCI Women (@BCCIWomen) August 19, 2025
Harmanpreet Kaur to lead the 15 member squad #WomenInBlue | #CWC25pic.twitter.com/WPXA3AoKOR