செய்திகள் :

34 நாள்களில் 100 தொகுதிகள்... இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம்!

post image

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று(ஆக. 19) தனது 100வது தொகுதியான ஆற்காட்டுக்குச் சென்றடைந்துள்ளார்.

கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப் பயணம், 34 நாள்களில் 10,000 கிலோமீட்டர் கடந்து, தினமும் சுமார் 14 மணி நேரம் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டும் தீர்வு கூறியும் உள்ளார்.

பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500 பணம், இலவச வேட்டி சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்தார்.

இந்த நிலையில், ஆற்காடு பிரசார கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ’’ஒவ்வொரு ஊரிலும், வேலைவாய்ப்பு இழப்பு, விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் ஆகியவற்றால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.

மீண்டும் அதிமுக நேர்மையான ஆட்சியையும் வளர்ச்சியையும் கொடுக்கும் என்று அவர்களின் கண்களில் நம்பிக்கையும் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

ஆற்காட்டில் 100வது தொகுதி பயணத்தை நிறைவு செய்த இபிஎஸ், “இந்த எழுச்சிப் பயணம் துவக்கம் மட்டுமே. உண்மையும், உழைப்பும், அம்மாவின் பார்வையும், வழிகாட்டும் தமிழ்நாட்டை நாம் சேர்ந்து உருவாக்குவோம்,” என்று உறுதியாக அறிவித்தார்.

இதையும் படிக்க: மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ரயில் மறியல்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் உள்ள மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பதாகையை ஏந்த... மேலும் பார்க்க

மதுரையில் விஜய்: தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள்(ஆக. 21) நடைபெறவுள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். மேலும் பார்க்க

ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ராமபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்று... மேலும் பார்க்க

முத்தரப்பு பேச்சுவார்த்தை: மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவர் லேண்ட்’ தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோர... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு ... மேலும் பார்க்க

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை,... மேலும் பார்க்க