செய்திகள் :

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

post image

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தன்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளில்லா ஆம்புலன்ஸை தொடர்ச்சியாக அனுப்பி, மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை தமிழக அரசு செய்தாகவும் தெரிவித்தார்.

அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்று ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் எனவும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1,330. இந்த வாகனங்கள் உயிர் காக்கும் சேவையை செய்துக் கொண்டிருக்கிறன. எங்கு விபத்து ஏற்பட்டாலும் 8-10 நிமிடங்களுக்குள் சென்று, அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுகின்றன.

தமிழ்நாட்டில் 108 ஆம்புலனஸ் சேவைபோல, உலகத்திலேயே வேறெங்கும் இதுபோன்று கிடையாது. ஆம்புலன்ஸ் வரும் வழியில் அதிமுக கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விடப்படுவதாக சொல்கிறார்.

அவருக்கு ஆம்புலன்ஸை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருகிறதுபோல, ஒரு முன்னாள் முதல்வர், இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரீகமான செயல். இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் அவருக்குதான் எதிர்ப்பு அதிகமாகும்” என்றார்.

இதையும் படிக்க: ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!

Public Health Minister M. Subramanian has said that it is indecent for the former Chief Minister to speak in a threatening tone.

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை,... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர... மேலும் பார்க்க

ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்சரிக்கை

அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமு... மேலும் பார்க்க

டி.ஆர். பாலு மனைவி காலமானார்!

திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (வயது 80) செவ்வாய்க்கிழமை காலமானார்.வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகி... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

சென்னையில் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய... மேலும் பார்க்க