முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?
கன்னடத்தில் வெளியான சு ஃப்ரம் சோ திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கன்னட மொழித் திரைப்படங்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் இல்லாமல் இருந்த நிலையை கேஜிஎஃப் திரைப்படம் மாற்றியமைத்தது. கன்னட மொழியின் முதல் பான் இந்திய சினிமா என்கிற அங்கீகாரத்துடன் ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கவும் செய்தது.
இப்படத்தைத் தொடர்ந்து வெளியான காந்தாரா திரைப்படமும் பல மாநிலங்களில் வரவேற்பைப் பெற்று அபாரமான வெற்றியை அடைந்தது. அடுத்து, காந்தாரா - 2 திரைப்படமும் பெரிய வணிக சாதனையைச் செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியான சு ஃப்ரம் சோ (su from so) என்கிற கன்னட படம் கர்நாடகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில் ஹாரர் காமெடி கதையாக உருவான இப்படத்தை ஜே.பி. துமினாட் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு கிராமத்திற்குள் நடக்கும் நகைச்சுவை பேய்க்கதையான இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் வசூல் வெற்றிப்படமாக சு ஃப்ரம் சோ மாறியுள்ளது அண்டை மாநில சினிமா துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரஜினி - கமல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?