செய்திகள் :

ரஜினி - கமல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 திரைப்படத்தை இயக்கும் பணிகளை லோகேஷ் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கூலி வெளியீட்டுக்கு முன்பே நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து நடிப்பதற்கான கதையைச் சொன்னாராம்.

கதை பிடித்துப்போக, ரஜினியும் கமலும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கைதி -2 திரைப்படத்திற்கு முன்பே இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

reports suggests director lokesh kanagaraj directs kamal haasan and rajinikanth movie

ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?

கன்னடத்தில் வெளியான சு ஃப்ரம் சோ திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.தென்னிந்திய சினிமாவில் கன்னட மொழித் திரைப்படங்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் இல்லாமல் இருந்த நிலையை கேஜிஎஃப் திரைப்ப... மேலும் பார்க்க

கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கூலி திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.ஆனால், மோசமான கதை மற்ற... மேலும் பார்க்க

சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டி: பாதியில் விலகிய சின்னர்.. அல்காரஸ் சாம்பியன்.!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் சின்னரை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீரரான இத... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் தனிநபா் பிரிவில்... மேலும் பார்க்க

டைமண்ட் லீக் இறுதி: நீரஜ் சோப்ரா தகுதி

சுவிட்ஸா்லாந்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் தடகள போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதிபெற்றாா்.டைமண்ட் லீக் போட்டியின் சிலெசியா லெ... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் விவகாரம்: ஆக. 22-இல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம், ஃபுட்பால் ஸ்போா்ட்ஸ் டெவலப்மன்ட் லிமிடெட் இடையேயான சச்சரவு குறித்து உச்சநீதிமன... மேலும் பார்க்க