கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கூலி திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், மோசமான கதை மற்றும் திரைக்கதையாலும் அதனால் உருவான லாஜிக் பிரச்னைகளாலும் கூலி திரைப்படம் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்துள்ளது. இதனால், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், இந்த வார முடிவில் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்! இந்தாண்டு இன்னும் ஸ்பெஷல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!