ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை ஏற்பட்ட மேகவெடிப்பினால், திடீரென வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கின.
இதையடுத்து, மலை மீது அமைந்துள்ள மசாலி மாதா கோயிலுக்கு செல்வதற்காக அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு தற்போது வெள்ளத்தில் பலியான பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலியானோரது எண்ணிக்கை மொத்தம் 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாயமான 39 பேரை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்றும் (ஆக.19) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேரிடரில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்பட ஏராளமான படைகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு