செய்திகள் :

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

post image

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள நிலையில், புது தில்லியில் அவா் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்களை மீண்டும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என வாங் யி உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்த நிலையில், இந்திய தொழில்துறை பின்னடைவை சந்தித்திருந்தது.

மேலும், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில்இன்று நடைபெற்று வருகின்றது.

இந்த ஆலோசனையில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை வாங் யி சந்தித்துப் பேசவுள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க பிரதமா் மோடி சீனா செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Chinese Foreign Minister Wang Yi has assured that rare earth minerals, fertilizers, and mining machinery will be exported to India again.

இதையும் படிக்க : பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர். முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட்... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை... மேலும் பார்க்க

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க