முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?
நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 320.52 புள்ளிகள் அதிகரித்து 81,593.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 24,965.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று ஓலா எலக்ட்ரிக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.
மும்பை பங்குச்சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்துள்ளன. துறைகளில், ஆட்டோ, மீடியா, எண்ணெய் & எரிவாயு, தொலைத்தொடர்பு குறியீடு தலா 0.5% உயர்ந்துள்ளன.
அதேநேரத்தில் பஜாஜ் பின்சர்வ், ஹிண்டால்கோ, கிராஸிம், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் கொண்டுவரப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல உலகளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சந்திப்பு நேர்மறையாக முடிந்துள்ளதால் ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வாரத்தில் 2-வது நாளாக பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.