Vice President: இந்தியக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கும் நீதிபதி சுதர்சன் ரெட்டி; யார் இவர்?
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியக் கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்?
பி. சுதர்ஷன் ரெட்டி, ஜூலை 8, 1946 இல் பிறந்தார். டிசம்பர் 27, 1971 அன்று ஹைதராபாத்தில் ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் விவகாரங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.

1988-90 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டு 6 மாதங்கள் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
மே 2, 1995 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 05.12.2005 அன்று குவ்ஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 12.01.2007 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 8.7.2011 அன்று ஓய்வு பெற்றார்.