செய்திகள் :

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

post image

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி(ரோப் கார்) ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.

இந்த நிலையில், பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, ஜூலை 15 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை, நாளை(ஆக. 20) முதல் மீண்டும் பயன்பாட்டு கொண்டுவரப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 35 நாள்களுக்குப் பிறகு நாளை காலை 9 மணிக்கு ரோப் கார் சேவை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு ... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர... மேலும் பார்க்க

ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்சரிக்கை

அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமு... மேலும் பார்க்க

டி.ஆர். பாலு மனைவி காலமானார்!

திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (வயது 80) செவ்வாய்க்கிழமை காலமானார்.வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகி... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

சென்னையில் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய... மேலும் பார்க்க