ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!
டி.ஆர். பாலு மனைவி காலமானார்!
திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (வயது 80) செவ்வாய்க்கிழமை காலமானார்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மகன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.