ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!
பிரேவிஸின் எழுச்சி..! டெஸ்ட், டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் அறிமுகம்!
சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் அறிமுகமானார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கெய்ர்ன்ஸில், கசாலிஸ் திடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியில் 22 வயதான இளம் அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் மற்றும் பிரெனலன் சுப்ராயென் இருவருக்கும் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பேபி ஏபிடி என்றழைக்கப்படும் டெவால்டு பிரேவிஸ், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றுவீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின்னர், தென்னாப்பிரிக்க அணியில் டெஸ்ட் தொடரில் ஒரு அரைசதம் விளாசியிருந்த நிலையில், டி20 தொடரில் அதிரடியாக விளையாடி 125* ரன்கள் விளாசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் முதல் முறையாக டெவால்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சக வீரர் எய்டன் மார்க்ரம் அவருக்கான தொப்பியை வழங்கி அவரை கௌரவித்தார்.
A dream realized as a new era is ignited. A proud Proteas moment as Dewald Brevis receives his ODI cap.
— Proteas Men (@ProteasMenCSA) August 19, 2025
The stage is set, and let the legacy begin. #WozaNawepic.twitter.com/cEr7hylvjJ