செய்திகள் :

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இல்லை!

post image

செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பிடிக்கவில்லை.

ஆசிய கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள 17 பேர் கொண்ட அணி இன்று(ஆக. 17) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமுக்கு அந்த அணியில் இடமில்லாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2021-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியனாக மேற்கண்ட இருவரும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவர்கள் இருவரும் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையாது என்றே அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹேசன் தெரிவிக்கிறார்.

பாகிஸ்தான் அணி விவரம்:

  1. சல்மான் அலி ஆகா (கேப்டன்),

  2. அப்ரார் அகமது,

  3. ஃபஹீம் அஷ்ரஃப்,

  4. ஃபக்கர் ஜமான்,

  5. ஹரிஸ் ரவூப்,

  6. ஹசன் அலி,

  7. ஹசன் நவாஸ்,

  8. ஹுசைன் தலாத்,

  9. குஷ்தில் ஷா,

  10. முகமது ஹாரிஸ் (விக்கெட்கீப்பர்),

  11. முகமது நவாஸ்,

  12. முகமது வசீம் ஜூனியர்,

  13. சையூம் அயூப்

  14. சல்மான் மிர்ஸா

  15. சாஹீன் ஷா அப்ரிடி,

  16. சுஃப்யான் மொகிம்.

  17. சஹீப்சாதா ஃபர்ஹான்

ஆசிய கண்டத்திலிருந்து 8 முக்கிய அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவில் முதல் டி20 ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நடைபெறும் செப். 28-இல் ஆசிய கோப்பை சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்.

கடைசி டி20யில் ஆஸி. பந்துவீச்சு: அணியில் 3 மாற்றங்கள்!

தென்னாப்பிரிக்கா உடனான 3-ஆவது மற்றும் கடைசி டி20யில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தெ.ஆ. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்ட... மேலும் பார்க்க

பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!

ஹர்பஜன் சிங்கிடம் பேச மறுத்த தனது மகள் குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் ஐபிஎல் போட்டியின்போது மோதி... மேலும் பார்க்க

ஆஸி. முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் காலமானார்!

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாப் சிம்சன் 89 வயதில் காலமானார். 257 முதல்தர கிரிக்கெட்டில் 21,029 ரன்களை குவித்த இவர் ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் 4,869 ரன்கள் எடுத்துள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமல்ல, வேட்கை..! விராட் கோலி குறித்து ஸ்ரீசாந்த்!

இந்திய அணி வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் அவரது பேர் ஆர்வத்தினால் வருகிறது எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

தென்னாப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சோனி பேக்கருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 3 ட... மேலும் பார்க்க

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயதான இளம் வீரர் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில... மேலும் பார்க்க