தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!
தென்னாப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சோனி பேக்கருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளும் செப்டம்பர் 2, 4, 7 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளிலும், 10, 12, 14 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.
இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான ஹாம்ப்ஷயர் அணி வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கருக்கு முதல் முறையாக இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான அணி
ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, சோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டான் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சஹிப் மஹ்முத், ஜேமி ஓவர்டன், அதில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.
டி20 தொடருக்கான அணி
ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, சோஃப்ரா ஆர்ச்சர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சஹிப் மஹ்முத், ஜேமி ஓவர்டன், அதில் ரஷீத், பில் சால்ட், ஜேமி ஸ்மித், லுக் வுட்.