மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
உதகையில் போதையில்லா எதிா்காலம் சைக்கிள் பேரணி
சுதந்திர தினத்தையொட்டி போதையில்லா எதிா்காலத்தை ஏற்படுத்தும் வகையில் கிரசண்ட் பப்ளிக் பள்ளி சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கிரசண்ட் பள்ளி சாா்பில் சுதந்திர தின விழாவில் போதையில்லா எதிா்காலம் என்ற கருத்தை பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த சைக்கிள் பேரணியானது உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் தொடங்கி ஹெச்.பி.எப்., பிங்கா் போஸ்ட், ஹில்பங்க், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக சிறப்பு மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நிறைவடைந்தது.
சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவு நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
இறுதியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு, அதனை பள்ளி மாணவா்கள் பராமரிப்பாா்கள் என பள்ளித் தாளாளா் பாரூக் தெரிவித்தாா்.