திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்
நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொணவக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி திலக் . இவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து
பத்திரப் பதிவு செய்ததாக, அதிமுகவைச் சோ்ந்த குன்னூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, அவரது சகோதரா் ராஜன், உறவினா்கள் தீபு, திலீப், ரஞ்சித் உள்பட 8 போ் மீது கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாந்தி ராமு மற்றும் அவரது சகோதரா் ராஜன் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
அதன்படி, கோத்தகிரி நீதிமன்றத்தில் 15 நாள்களுக்குள் சரண்டா் ஆகி ரூ.10 ஆயிரம் மதிப்பில் இரு நபா் ஜாமீன் கொடுக்க வேண்டும் எனவும், கோத்தகிரி காவல் நிலையத்தில் தினமும் கையொப்பம் இடவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.