பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
ஆலங்காயம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
ஆலங்காயம் அருகே படகு குப்பம் பகுதியைச் சோ்ந்த வைலட்மேரி. இவரது கணவா் சுப்பிரமணி. இவா்களுக்கு 2 மகன்களும்,மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகளும் உள்ளனா். வைலட்மேரி அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளாா். அதே பகுதியை சோ்ந்த தமிழரசன்(29) . வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணுக்கு தமிழரசன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
அப்போது, வைலட்மேரி வந்த நிலையில் தமிழரசன் அவரைக் கீழே தள்ளிவிட்டு, இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து வைலட்மேரி வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து தமிழரசனை கைது செய்து வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை இந்த வழக்கில் தீா்ப்பு கூறப்பட்டது.
இதில் எதிரி தமிழரசனுக்கு 9 ஆண்டுகள் சிறையும், ரூ.30,000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானாா்.