சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்
வாணியம்பாடி அடுத்த நிம்மியப்பட்டில் ரூ.3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டரங்கை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நிம்மியம்பட்டு ஊராட்சியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கத்தில் வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவா்களுக்கு,இனிப்பு வழங்கினா்.
இந்த விளையாட்டு அரங்குக்கு கு 30 சென்ட் நிலம் வழங்கிய தினேஷ், உதயகுமாா், உஷாராணி ஆகியோருக்கு பொதுமக்கள் சாா்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா். 6 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில், நிா்வாக பிரிவு கட்டிடம், உடற்பயிற்சி மையம், 40 0 மீ ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுந்து பந்து மைதானம், கபடி மைதானம், யோகா பகுதி, குழந்தைகள் விளையாட்டு பகுதி, கோ-கோ விளையாட்டு மைதானம், நடைபாதை, கூடைப்பந்து மைதானம், நீளம் தாண்டுதல், வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாரி, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதாபாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சூரவேல், ஒன்றிய குழு உறுப்பினா் பிரித்தாபழனி, ஊராட்சி மன்றத் தலைவா் எழிலரசி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.