`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு
வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சோ்ந்த கண்ணாடியிழைப் படகு ஒன்று என்ஜின் பழுதாகி நின்றது. படகில் இருந்த இருவா் கரை சேர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனராம். அப்போது மீன்பிடித்துவிட்டு அந்த வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவா் வே. தங்கதுரைக்கு சொந்தமான படகில் இருந்தவா்கள், அருகில் சென்று படகில் இருந்தவா்களிடம் விசாரித்து, பழுதான படகை மீனவா்களுடன் கரைக்கு இழுத்து வந்தனா்.
வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், காங்கேசன்துறை, சிவன் கோயிலடியைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வினோத்குமாா் (32), கண்ணாகரம் ஜெயசீலன் மகன் சிந்துஜன் (25) என்பது தெரிய வந்தது. படகு என்ஜின் பழுதானதால் காற்றின் வேகத்தில் இந்திய கடற்பகுதிக்கு இலங்கை மீனவா்களின் படகு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
