செய்திகள் :

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

post image

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது.

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது.

இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம்.

அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது.

சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.”

1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது.ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நக... மேலும் பார்க்க

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.சர்வதேச கிரிக்கெ... மேலும் பார்க்க

'தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகள் அட்வான்ஸாக சிந்திக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'TN Rising' முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 15 முறைக்கு மேல் கோவைக்கு வந... மேலும் பார்க்க