ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
பங்குச் சந்தை இனி ஏறுமா அல்லது இறங்குமா?- ஷேர் மார்க்கெட் எக்ஸ்பர்ட் வ.நாகப்பன் பேசுகிறார்!
ஓராண்டுக்கு முன்பு இறங்கத் தொடங்கிய பங்குச் ச்ந்தை கடந்த ஏப்ரல் மாதம் வரை இறக்கத்திலேயே பயணமானது. பிற்பாடு மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய சந்தை தற்போது பழைய நிலையை எட்டியதுடன், அதற்கு மேலும் உயரத் தொடங்கி, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த நிலையில், இனி பங்குச் சந்தை மேல்நோக்கிச் செல்லுமா அல்லது இறங்குமா, பங்குச் சந்தையில் இன்றுள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்துத்தான் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தற்போது தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். காரணம், பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து,
பங்குகளை வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களாக இருந்தாலும், சந்தையின் போக்கைப் பார்த்துத்தான் மேற்கொண்டு அதிகமாக முதலீடு செய்வதற்கும் அல்லது சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், பங்குச் சந்தையானது ஒரே மாதிரி மேல்நோக்கி மட்டும் அல்லது கீழ்நோக்கி மட்டும் செல்வதில்லை. நாம் எதிர்பார்க்காத காரணங்களால்கூட நிஃப்டி குறியீட்டு எண் 100, 200 புள்ளிகள் என்று விழத்தான் செய்கின்றன. சந்தை இன்னும் இறங்குமோ என்று கவலையுடன் உட்கார்ந்திருக்கிற நிலையில், சர்ரென்று ஏறத் தொடங்கி, நமக்கு ஆச்சரியத்தைத் தந்துவிடுகிறது.

பங்குச் சந்தை குறித்து இப்படிப் பல சந்தேகங்களும் கேள்விகளும் பங்குச் சந்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு மனதிலும் இருக்க, இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சொல்லி, முதலீட்டாளர்களின் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஒரு சிறப்பு ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.
''பங்குச் சந்தை முதலீடு.... வளர்ச்சியும், வருங்காலமும்...'' என்கிற தலைப்பில் நடக்கும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்பது குறித்து பேச இருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், பின்வரும் லிங்கினை https://labham.money/webinar-dec-14-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec14_2025 சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம். பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும்.
பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்கிறவர்களும் இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொண்டு சந்தையின் போக்கு பற்றி தெளிவு பெறலாமே!
கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!
ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!



















