"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!
சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மரியானாவை வீரத் தமிழச்சியாக, அன்பு சகோதரியாக கொண்டாடியது சோஷியல் மீடியா சமூகம். ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த பிரபல்யத்தால் அடுத்த வருடமே விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டுக் கதவும் திறந்தது. இன்னும் பிரபலமானார்.

விளம்பரம், சீரியல், சினிமா, ஒரு ரவுண்டு வரத் தொடங்கியவரைப் பற்றி சமீப காலமாக எந்தவொரு பேச்சும் இல்லாதிருந்த சூழலில், திடீரென தன் திருமணம் குறித்து அறிவித்திருக்கிறார்.
தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களைப் பகிர்திருக்கும் ஜூலி மாப்பிள்ளை முகத்தை மட்டும் காட்டவில்லை.
இந்நிலையில், ஜூலியின் வருங்காலக் கணவரைத் தேடி விசாரணையில் இறங்கினோம். ''அவரு பேர் முகமது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வர்றார். விளம்பரப்படங்களும் எடுப்பார். சமீப சில வருடங்களாக ஜூலிக்கும் அவருக்குமிடையில் நட்பு இருந்தது. அது எப்ப காதலாச்சுன்னு தெரியலை, இப்ப முறைப்படி உலகத்துக்கு அறிவிசிருக்காங்க'' என்கின்றனர் ஜூலி மற்றும் அவரின் வருங்காலக் கணவர் முகமது இருவரையும் தெரிந்த சிலர்.
ஜூலியின் வருங்காலக் கணவரான முகமதுவையே தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னோம்.
''ரொம்ப நன்றிங்க என்றவர், கல்யாணம் குறித்து எல்லாருக்கும் சீக்கிரமே ரெண்டு பேரும் சொல்றோம். இப்ப ஷுட்டிங்ல இருக்கேன். முடிஞ்சதும் டீடெய்லா பேசறேன்" என்றபடி திருமணத் தகவலை உறுதி செய்தார்.


















