செய்திகள் :

BB Tamil 9: "துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க"- அரோரா, கம்ருதீன் மோதல்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்க் நடந்தது.

BB Tamil 9
BB Tamil 9

அதில் "ஆரோக்கியமா கேம் விளையாடுற மாதிரி தெரியல","கோழைத்தனமான பதில் சொல்றாங்க", "அதிகார துஷ்பிரயோகம் செய்றாங்க" போன்ற காரணங்களுக்காக ரம்யாவை சிலர் நாமினேட் செய்திருந்தார்கள்.

"பார்வதி, அரோரா வச்சு கம்ருதீன் ஒரு விளையாட்டு விளையாடுறாரு" என திவ்யா கம்ருதீனை நாமினேட் செய்திருந்தார். "நான் ரொம்ப நல்லவன்னு தன்னை வெளிப்படுத்திக்கிறாரு" என சபரியை சுபிக்ஷா நாமினேட் செய்திருந்தார்.

தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அதில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடக்கிறது.

துஷார், துஷார், துஷார்'ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா என்கிட்ட மோது. துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க " என அரோரா கோபப்பட்டு கம்ருதீனிடம் கத்துகிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"துஷார் வெளிய போயிட்டான், என்னைய ஞாபகம் வச்சுருப்பானான்னுகூட தெரியல அப்படின்னு நீ தான் சொன்ன" என கம்ருதீன் அரோராவிடம் சொல்ல "நான் அப்படி சொன்னனா" என அரோரா கத்த இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!

சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க"- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.BB Tamil 9இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கு... மேலும் பார்க்க

Top Cooku Dupe Cooku 2: டைட்டில் வென்ற வில்லன் நடிகர்; இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசனில் டைட்டில் வென்றிருக்கிறார் நடிகர் பெசன்ட் ரவி.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக்கு வித் கோமாளி'யைத் தயாரித்து வந்த மீடியா ம... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 63: ரம்யாவை வறுத்தெடுத்த விசே; சான்ட்ராவின் ஹைவோல்டேஜ் அழுகை டிராமா; என்ன நடந்தது?

ரெட்ரோ சினிமா அணியை ஜெயிக்க வைத்து, தனது அணியில் உள்ள அனைவரையும் காப்பாற்றிய பிரஜின், இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டது சுவாரசியமான முரண்.எதிர்பார்த்தபடியே சான்ட்ரா கதறித் தீர்த்தார். பிரிவின் துக்கம் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "கோழைத்தனமா பதில் சொல்றாங்க" - நாமினேஷனில் ரம்யா, கம்ருதீன், சபரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் இந்த வாரத்திற்க... மேலும் பார்க்க