ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அத...
பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!
ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்டைகளை பயன்படுத்தி சட்டை வடிவமைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவின்படி, பெங்களூருவைச் சேர்ந்த பேஷன் டிசைனர் பல கர்சீஃப்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, அதனை ஒரு நீண்ட துணி போல மாற்றுகிறார்.
பின்னர் சட்டை தைப்பதற்கு தேவையான அளவுகளை அந்த துணியில் வரைந்து வெட்டியெடுகிறார். சட்டையின் தோள்பட்டை மற்றும் கை கூடுதல் கவனம் செலுத்தி துணி துண்டுகளை இணைத்து வித்தியாசமான டிசைனை உருவாக்குகிறார்.
இறுதியில் உருவான அந்த சட்டை பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும், ஒரு ரெட்ரோ லுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
பழைய பொருட்களை தூக்கி எறியாமல், இதுபோன்று ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திய அந்த நபரின் திறமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
















