Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
களம்காவல்: `மொழி கடந்து பார்த்த ரசிகர்களுக்கு.!" - வைரலாகும் நடிகர் மம்மூட்டி வீடியோ
74 வயதிலும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் திரையுலகில் பயணித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் இவர் நடித்தப் படங்கள் காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற படங்களும், கதைத் தேர்வும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் tஹொடர்ச்சியாக அவரின் நடிப்பில் அடுத்து வந்திருக்கும் படம் களங்காவல்.
கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படத்தை ஜிதின் கே. ஜோஸ் இயக்கியிருந்தார். விநாயகன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த நிலையில், களங்காவல் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான நடிகர்கள் மம்மூட்டியும், விநாயகனும் வீடியோ மூலம் நன்றி தெரிவித்திருக்கின்றனர். அந்த வீடியோவில், ``நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த களங்காவல் என்ற படத்தை பெரிய வெற்றியாக மாற்றியதற்கு எல்லா ரசிகர்களுக்கும் நன்றி கூறத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.
ஒப்பீட்டளவில் புதிய எழுத்தாளரும், ஒரு புதிய இயக்குநரும், நிறைய புதியவர்களும், பழைய கலைஞர்களும் என இந்தப் படத்திற்கு பின்னாலும் முன்னாலும் உழைத்திருக்கிறார்கள். எனவே, மொழி வேறுபாடு இல்லாமல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லோருக்கும் மலையாளத்திலேயே நன்றி சொல்கிறேன்.
நன்றி நன்றி நன்றி எல்லோருக்கும் நன்றி
அவர்களுக்கு இந்த நன்றி புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து பேசிய நடிகர் விநாயகன், ``நன்றி நன்றி நன்றி எல்லோருக்கும் நன்றி. என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷம் மட்டுமே இருக்கிறது. சொல்லவேண்டியதெல்லாம் படத்தில் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















