ஜெர்மனியுடன் தோல்வி; சென்னையில் சோகத்துடன் வெளியேறிய இந்திய ஹாக்கி அணி | Photo A...
``வழுக்கை தலையில் முடி வளர மருந்து, சோதனையில் நல்ல பலன்'' - அயர்லாந்து மருந்துக் கம்பெனி சொல்வதென்ன?
ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக மாறுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு 70 வயதான பிறகும் முடி உதிர்ந்திராதிருக்கலாம். ஆனால் சிலருக்கு 20 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையாகி இருப்பார்கள்.
வழுக்கையாவதால் அதிகமான ஆண்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மணமகன் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் தலையில் முடி இல்லையெனில் பெண்கள் திருமணம் செய்ய மறுக்கலாம். இதனால் சிலர் லட்சக்கணக்கில் செலவு செய்து தலையில் முடியை புதிதாக நடவு செய்கின்றனர்.

தலையில் முடி வளர எவ்வளவோ மருந்துகள் சந்தையில் வந்திருந்தாலும், எந்த மருந்தும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மருந்துக் கம்பெனி தலையில் முடி வளர உதவும் மருந்தை கண்டுபிடித்து உள்ளது.
காஸ்மோ பார்மசூடிகல்ஸ் என்ற அந்த மருந்து கம்பெனி பல கட்ட சோதனைகளில் அந்த மருந்தை உறுதி செய்துள்ளது. இந்தக் கம்பெனி இரண்டு வகையான மருந்துகளை தயாரித்து, அவற்றை இரண்டு குழுக்களுக்கு கொடுத்து சோதனை செய்தது.
Blacebo மற்றும் Clascoterone என்ற அந்த மருந்துகள் முதல் சோதனையில் 53.9 சதவீதம் நல்ல முடிவை கொடுத்தது. மற்றொரு சோதனையில் 16.8 சதவீதம் கூடுதல் பலனை கொடுத்தது.
இந்த சோதனையில் தலையில் முடியில்லாத 1,500 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு மருந்துகளில் Clascoterone மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று அந்த மருந்துக் கம்பெனியின் தலைமை நிர்வாக இயக்குனர் நெபோலி தெரிவித்துள்ளார்.

``இரண்டு கட்ட சோதனையிலும் இந்த மருந்து நல்ல பலனை கொடுத்து வருகிறது. எந்த வித பக்க விளைவும் இல்லை. இதன் மூலம் முதல் முறையாக முழுமையாக பலனளிக்கும் தலை வழுக்கையை போக்கும் மருந்து விற்பனைக்கு வர இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்துக்கு அடுத்த ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையத்திடம் (FDA) ஒப்புதல் பெற்றுவிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தலையில் வழுக்கை ஏற்படுவது உடனே நடப்பதில்லை; அது ஏழு கட்டமாக நிகழ்வதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. முதலில் நெற்றியில் முடி உதிர தொடங்கி, காதுக்குப் பின்புறம் மற்றும் படிப்படியாக உச்சத் தலையை நோக்கி முடி உதிர்வு நடப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
















