ஜெர்மனியுடன் தோல்வி; சென்னையில் சோகத்துடன் வெளியேறிய இந்திய ஹாக்கி அணி | Photo A...
Top Cooku Dupe Cooku 2: டைட்டில் வென்ற வில்லன் நடிகர்; இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசனில் டைட்டில் வென்றிருக்கிறார் நடிகர் பெசன்ட் ரவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக்கு வித் கோமாளி'யைத் தயாரித்து வந்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறி கடந்தாண்டு சன் டிவிக்கு வந்து 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியைத் தயாரித்தது நினைவிருக்கலாம். வெங்கடேஷ் பட் நடுவர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள் ராகேஷ் மற்றும் ஷிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
நடிகைகள் கிரண், ஷிவானி, டெல்னா டேவிஸ், பிரியங்கா, நடிகர்கள் பெசன்ட் ரவி, ரோபோ சங்கர், வாகீசன் உள்ளிட்டோர் குக்குகளாகவும், கமலேஷ், மோனிஷா ப்ளெஸ்ஸி, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் டூப் குக்குகளாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலந்துகொண்ட ரோபோ சங்கர் உடல் நலக் குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்தார்.
ஒவ்வொரு வாரமும் சிறந்த குக்குகள் தேர்தெடுக்கப்பட்டனர். அதேநேரம் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவதும் நடந்தது.
ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வந்தது. அந்த எபிசோடுக்கான ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சில சோர்ஸ் மூலம் கிடைத்த தகவல் படி நிகழ்ச்சசி நடுவர்களின் அமோக ஆதரவைப் பெற்று நடிகர் பெசன்ட் ரவி டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இரண்டாவது இடம் ப்ரீத்தாவுக்கு கிடைத்துள்ளதாம்.
பெசன்ட் ரவி சென்னையில் உணவகம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் நிறைவு எபிசோடு ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

















