கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்
நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது.
திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நிகழ்வான கருட வாகனம் மற்றும் தீா்த்த வாரி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பெருமாள் மணிகா்ணகை காவிரி ஆற்றின் கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீா்த்தவாரியை தொடந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.