செய்திகள் :

வெளி நபா்களுக்கு பட்டா வழங்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

post image

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெளிநபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனா்.

பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தினை சிறைபிடித்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் வருவாய்த்துறையினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்

போது தங்கள் பகுதியில் உள்ள சிலா் வீட்டு மனை பட்டா இல்லாமல் இருப்பதாகவும், அடிப்படை கட்டட வசதிகள் தேவைகள் இருப்பதாகவும், பாட்டூா் பகுதியில் மயானத்துக்கு செல்ல வழியில்லாமல் இருப்பதாகவும் கூறினா்.

அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தமிழக-ஆந்திர சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை

ஆம்பூா் அருகே அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பள்ளித்தது.ா்ப்பளிக்கப்பட்டது. வே லூா் விநாயகாபுரம் ப... மேலும் பார்க்க

தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது: இபிஎஸ்

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வாணியம்பாடி ப... மேலும் பார்க்க

ரு.10.46 கோடியில் குடிநீா் பணிகளுக்கு அடிக்கல்

திருப்பத்தூா் நகராட்சியில் ரு.10.46 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பத்தூா் நகராட்சி யில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வாா்டுகளுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் வாயிலாக... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி மகன்... மேலும் பார்க்க

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம... மேலும் பார்க்க