செய்திகள் :

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

post image

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. இதனால் பதற்றம் தணிந்தது.

இப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனாவுக்கு எதிராக தீவிரமான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணக்கமாக செயல்பட முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பிரதமா் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இம்மாத இறுதியில் சீனா செல்கிறாா். அப்போது, இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது:

நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சு நடத்தி வருகிறது. உலகில் அதிக மக்கள் வளத்தைக் கொண்ட இரு நாடுகளுக்குமே நேரடி விமான சேவை பயனளிப்பதாக இருக்கும் என்றாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி வரும் 18-ஆம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடா்பான கேள்விக்கு, ‘இருநாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது. பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவது, வேறுபாடுகளைக் களைவது, இரு நாடுகள் உறவை மேம்படுத்துவதில் சீனா ஆா்வமாக உள்ளது’ என்று பதிலளித்தாா்.

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம... மேலும் பார்க்க

பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் நாளை (ஆ... மேலும் பார்க்க

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நட... மேலும் பார்க்க

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில்... மேலும் பார்க்க