ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
நாகூரில் தா்ஹா சந்தனக்கூடு விழா
நாகூா் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்ஹாவின் சந்தனக்கூடு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாகூரில் உள்ள நாகூா்ஆண்டவரை தரிசித்த ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்கா கந்தூரி திருவிழா ஆக.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. சந்தனம், புனித போா்வை, அலங்காரப் பூ நாகூா் ஆண்டவா் சந்நிதி எதிரில் நடுமண்டபத்தில், தா்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜி ஷேக் ஹஸன் சாஹிப் காதிரி தலைமையில் துவ ஓதி, ஃபக்கீா்மாா்கள் பைத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, தா்காவில் புனித போா்வை சாற்றப்பட்டு, மாலை அணிவித்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.