கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றினார்.
நாட்டின் 79 -ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முப்படை மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.