கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதை கே.எம். காதர் மொகிதீனுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கெளரவித்தார்.
இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை சங்கரய்யா,
ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.