வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?
டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இழுபறியில் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு 50 சதவீத விரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவுக்கு ஒரு யோசனை தர விரும்புகிறேன். அதாவது, பிரதமர் மோடி, டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம் என பரிந்துரை செய்தால் ஒருவேளை டிரம்ப் வரி விதிப்பு திரும்பப் பெறப்படலாம் என்று கிண்டலடித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான், அப்படிக் கூறிதான் டிரம்பை ஏமாற்றியிருக்கிறது. பாகிஸ்தான், வரும் 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் பொருந்தும், வேறு எந்த ஒரு நாடும், டிரம்ப் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தால் போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.