மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!
விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் கிடைத்த வரவேற்பினால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இதுவரை இப்படம் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். இந்நிலையில், அமேசான் பிரைமில் இந்தப் படம் வரும் ஆக.22 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகுவது குறிப்பிடத்தக்கது.
Get ready to fall in love with Aagasaveeran and Perarasi... twice #ThalaivanThalaiviiOnPrime, Aug 22@VijaySethuOffl@MenenNithya@pandiraaj_dir@iYogiBabu@Music_Santhosh@SathyaJyothi@Lyricist_Vivek@studio9_suresh@Roshni_offl@kaaliactor@MynaNandhini@ActorMuthukumarpic.twitter.com/VqI3bn7zqP
— prime video IN (@PrimeVideoIN) August 15, 2025