தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி இன்று(ஆக. 15) பாஜகவில் இணைந்தார்.
சென்னையைக் சேர்ந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 50-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துகளை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வந்தார்.
சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல திருநங்கையான பிக்பாஸ் புகழ் நமிதா மாரிமுத்துவும் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நடிகை திருமதி.கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் திரு. @fefsisiva அவர்களின்… pic.twitter.com/FuIFKdcrRS
— Nainar Nagenthiran (@NainarBJP) August 15, 2025