தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
விளம்பர எண். MOES/PAMC/DOM/145/2023 (E-14628)
பணி: JRF
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.31,000+16% எச்ஆர்ஏ
தகுதி: நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், மரபியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருப்பதுடன் கேட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000+4% எச்ஆர்ஏ
தகுதி: தாவரவியல், விலங்கியல், வாழ்க்கை அறிவியல் ஆகிய ஏதாவதொன்றில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து shanmugaiah.biological@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2025
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும் அல்லது www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Applications are invited from the interested candidates for the following on a purely temporary basis to work on the research project entitled "Studies on ...