புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
விண்ணப்பித்துவிட்டீர்களா..?: ரூ.1,12,400 சம்பளத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை!
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவியாளர் பணிகளுக்குன தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.
இதுபற்றிய விபரம் வருமாறு:
விளம்பர எண். : ICMR-NIN/Admin/DR/Assistant/01/2024-25
பணி : Assistant
காலியிடங்கள் : 4
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் எம்எஸ் ஆபிஸ், பவர் பாயிண்ட் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.8.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.2,000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.icmr.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2025
மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.