செய்திகள் :

``தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம்'' - எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

post image

தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்தான்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா, தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

அறிவு அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு, ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து. இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார்.

ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள்.

தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு அவர்கள் மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜு அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

இதேபோன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், அம்மா அவர்களின் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது மு.தம்பிதுரை அவர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

"செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம்... மேலும் பார்க்க

``பணி நிரந்தரம் இல்லை; தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள்'' - ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.போராட்டக்... மேலும் பார்க்க

``79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், இப்படி அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை'' -எடப்பாடி பழனிசாமி

தூயமை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

``பெரியார் வழி ஆட்சியில், போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்'' - TVK ஆதவ் அர்ஜுனா கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வல... மேலும் பார்க்க

``வாக்குறுதி தந்தவர் தியேட்டரில்; மக்கள் நடுரோட்டில்'' - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு ADMK கண்டனம்

தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாள்களாக, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்... மேலும் பார்க்க

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்னி அரசு கண்டனம்

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின... மேலும் பார்க்க