செய்திகள் :

Jessica Radcliffe: திமிங்கலம் பெண் பயிற்சியாளரை தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றதா? - உண்மை என்ன?

post image

பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோவில் "ஜெசிகா ராட்கிளிஃப்" என்ற பெண் பயிற்சியாளரை திமிங்கலம் திடீரென மேலே பாய்ந்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பலர், அவர் நீரில் இருந்து மீட்கப்பட்ட சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். இந்த வீடியோ டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டாலும், ஜெசிகா என்ற பயிற்சியாளர் திமிங்கலத்தால் தாக்கப்பட்டதற்கு எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இத்தகைய விபத்துகள் நிகழ்ந்தால், கடல் பூங்காக்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த சம்பவம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. வீடியோவில் உள்ள நீரின் இயக்கம், அதன் ஒலி எல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் இந்த வீடியோவை "வதந்தி" என முத்திரை குத்தியுள்ளது. இப்படி ஒரு பெரிய அளவிலான சோகம் நடந்திருந்தால் அது சர்வதேச செய்திகளில் இடம்பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வீடியோவின் காட்சிகள் மற்றும் ஒலிகள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவால் திரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் எந்த அளவிற்கு உண்மைத்தன்மையை சோதிக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

``ஆதார், பான், வாக்காளர் அட்டை இருந்தால் மட்டும் இந்திய பிரஜையாகிவிட முடியாது!" - மும்பை ஹைகோர்ட்

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை போலீஸார் கைது செய்து அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி வருகின்றனர். மும்பை தானேயில் பாபு அப்துல் என்பவரை போலீஸார் கைது... மேலும் பார்க்க

’5 மாதம் டேட்டிங் செய்தேன்..’ AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்

இந்த செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, வேலைகளில் மட்டுமில்லாமல் மனித உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. அப்படி செயற்கை நுண்ணறிவு நமது அன்றாட வாழ்வில் எவ்வளவு ஆழமாகப் புகுந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில... மேலும் பார்க்க

China Robot Mall: வாலாட்டும் நாய் முதல் பரிமாறும் சர்வர் வரை; எல்லாம் ரோபோ மயம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான '4 S' என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உ... மேலும் பார்க்க

`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?

பெங்களூரு நகரின் போக்குவரத்துப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஐந்து வயது சிறுமியின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ’மெட்ரோவின் மஞ்சள் பாதை’... மேலும் பார்க்க

Bumpiest flight routes: விமானத்தில் திடீரென ஏற்படும் குலுக்கல்களால் திணறும் விமானிகள்- பின்னணி என்ன?

கடந்த வாரம், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற டெல்டா விமானம் கடுமையாக குலுங்கியதால், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என அச்சமடைந்துள்ளனர்.மோசமான வானிலை மாறுப... மேலும் பார்க்க