தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ஐந்து பேருடன் தனது இருசக்கர வாகனத்தில் பனங்காடு சாயபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் நோக்கி சென்று கார் அறிவழகன் சென்ற டூவீலர் மீது வேகமாக மோதியது.

இதில் பைக்கில் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யாஸ்ரீ, சகோதரி மகள் தேஜாஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த உஷா மற்றும் மகள் ரூபா இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டிய கேரளா, திருச்சூரை சேர்ந்த முகமது ரியாஸ்(31) என்பவரை கைது செய்தனர்.

விபத்தில் அப்பா, மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கோகத்தை ஏற்படுத்தியது.