காவல்துறை அதிகாரியாக சூர்யா?
நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா - 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தேவா வந்துட்டார், வழிவிடலாமா? கூலி - திரை விமர்சனம்!