செய்திகள் :

Vyjayanthimala: "92 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்! " - வைஜெயந்திமாலா

post image

தமிழ், தெலுங்கு, இந்தி என அப்போதே இந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை வைஜயந்திமாலா.

நடிப்பைத் தாண்டி நடனத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் இவர்.

Vyjayanthimala
Vyjayanthimala

தன்னுடைய சினிமா கரியரின் உச்சத்தில் இருந்து பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும்போதே நடிப்பிலிருந்து விலகிய அவர், அதன் பிறகு நடனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "கடவுள் அருளால் 92 வயதில் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

என் வாழ்க்கையையும் கரியரையும் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

நான் செய்தவற்றில் ஆழ்ந்த திருப்தி மட்டுமே உணர்கிறேன். நான் மிகவும் இளவயதில் நடிக்கத் தொடங்கினேன்.

35 வயதில், திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இருந்தேன். ராஜேந்திர குமார்ஜியுடன் 'கன்வார்' தான் எனது கடைசிப் படம்.

Vyjayanthimala
Vyjayanthimala

ஆனால், என் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் என் முடிவை ஏற்கத் தயாராக இல்லை. பல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

ஆனால், நான் சமன்லால் பாலியைத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். கோல்ஃப் மீதான பரஸ்பர ஆர்வம் மூலம் நாங்கள் இருவரும் நெருக்கமானோம்.

என் கரியரின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன். ஒருமுறை ஓய்வு பெற்ற பிறகு, நான் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை." எனக் கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த்: 'மராட்டிய பூர்வீகம்' முதல் 'சமூக அக்கறை' வரை - CPI தலைவர் முத்தரசன் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அவரது திரை வாழ்க்கையின் 50 ஆண்டுகள் நிறைவையும் ஒன்றாக கொண்டாடுவதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரு... மேலும் பார்க்க

Coolie - War 2: ரஜினி - ஹ்ரித்திக் இணைந்து நடித்த காட்சி; அனுபவம் பகிர்ந்த பாலிவுட் நடிகர்!

Coolie - War 2ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் வார் 2 திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு 1986ம் ஆண்டு ஹ்ரித்திக் குழந்தை நட்சத்திரமாக நடித்த 'பகவான... மேலும் பார்க்க

Coolie: `இளையராஜா - தேவா' - 'கூலி' படத்தில் 2 ரெட்ரோ பாடல்கள் இதுதான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்தரா, செளபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் எனப் பலரும் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குக... மேலும் பார்க்க

Coolie Review: ரஜினி - லோகேஷ் `பவர்ஹவுஸ்' காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்... படமாக எப்படி?

விசாகப்பட்டின துறைமுகத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களை வைத்து, சர்வதேச அளவில் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகிறார் சைமன் (நாகர்ஜுனா). சைமனுடைய விசுவாசியான தயாள் (சௌபின் ஷாஹிர்), மொத்த து... மேலும் பார்க்க

Coolie: "அடுத்து அஜித் குமாரை வைத்து படம் எடுப்பீர்கள்?" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபே... மேலும் பார்க்க