மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்
பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சான்றாக நினைவுகூரப்படும்.
ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி குடிமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.
நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம். நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது” எனத் தெரிவித்தார்.