மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
Anupama: ''அப்படத்தில் எனக்கு வசதியில்லாத உடைகளை அணிந்தேன்; மக்கள் வெறுத்தனர்!" - அனுபாமா பரமேஷ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் 'பரதா' என்ற தெலுங்கு திரைப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடித்திருந்த 'டிராகன்' படமும் வெளியாகியிருக்கிறது. இதைத் தாண்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'பைசன்' படமும் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

இப்படி பரபரப்பான லைன்-அப்களுடன் சுற்றி வரும் அனுபமா பரமேஸ்வரன், 'டில்லு ஸ்கொயர்' படத்தில் நடித்ததனால் மக்கள் அவரை வெறுத்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன் பேசும்போது, " 'டில்லு ஸ்கொயர்' திரைப்படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் கிடைத்திருந்தது. கமர்ஷியல் படங்களில் வருவது போன்ற ஒரு கேரக்டர் அது கிடையாது.
நான் அப்படியான கதாபாத்திரங்களையும் தவறு எனக் குறிப்பிடவில்லை. அந்தத் திரைப்படத்தில் வரும் என் கதாபாத்திரம் என்னுடைய ரியல் கேரக்டருக்கு நேரெதிரானது.
எனக்கு வசதியில்லாத ஆடைகளையே (Uncomfortable Clothes) அப்படத்தில் நான் அணிந்திருந்தேன்.

அப்படத்தின் அக்கதாபாத்திரத்திற்கு அப்படியான ஆடைகள் தேவைப்பட்டன. அப்படியான ஆடைகளை அணிந்து அந்தத் திரைப்படத்தில் நடித்தது எனக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
அதில் நடிக்கும் முடிவை எடுப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால், அதில் நடிப்பதற்குத் தயக்கமாகவும் யோசித்தேன். அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக மக்கள் பலரும் என்னை வெறுத்தார்கள்." எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...