செய்திகள் :

பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

post image

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் நாளை (ஆக.15) அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது, பல உலகத் தலைவர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, அதிபர் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், நேற்று (ஆக.13) காணொலி வாயிலாகச் சந்தித்து பேசினர்.

அப்போது, ஜெர்மனியில் இருந்து காணொலி சந்திப்பில் கலந்துகொண்ட அதிபர் ஸெலன்ஸ்கியிடம், புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதிபர் டிரம்ப்பும் மற்ற தலைவர்களும் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் ஸெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகத்துக்கு இன்று (ஆக.14) நேரில் சென்று அவருடன் கலந்துரையாடினார். ஆனால், இந்தச் சந்திப்பில் பேசியவைக் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

முன்னதாக, அமெரிக்க மற்றும் ரஷியா அதிபர்களின் சந்திப்பில், தங்களது நலன் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஆபத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தச் சந்திப்பில் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ரஷியா பல கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

Ukrainian President Volodymyr Zelensky has met and spoken in person with British Prime Minister Keir Starmer.

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம... மேலும் பார்க்க

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நட... மேலும் பார்க்க

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில்... மேலும் பார்க்க

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சை மிகுந்த பகுதியில், சுமார் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.சர்வதேச அளவில் வந்த எதிர்ப்புகளினால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஈ1... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படை உருவாக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தில், புதியதாக ராக்கெட் படை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் இன்று (ஆக.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ... மேலும் பார்க்க